அன்பினிய என் அப்பா!

இன்று வரை
யாரையும் அவ்வளவு
நேசித்ததே இல்லையே
என்னுயிர்
என்னுயிர் அப்பா உன்னை விட !

எந்தனுள்ளம்
ஆறுதலைத் தேடுகிறது
கண்ணீருடன் இன்னமும்
அனாதை நிலையிலிருந்து
மீள இயலமால் !

வருடங்கள் பதினாறு காலமாக
அப்பா உன் மரணம்
கொண்டு சென்றது
உன் உயிர் மட்டுமா
என்னுயிர் நட்பும் தானே !
கனக்கிறதே இதயமின்றும் !

மனம் திறந்து பேச
பொறுமையாக யோசனை சொல்ல
சிரிக்க பயணிக்க ஒன்றாய உணவருந்த சிநேகிக்க
எந்தன் மகிழ்ச்சியின் சங்கீதத்திற்கு இசையமைக்க
அன்பின் வடிவமே என் அப்பா
நீ விண்ணகத்தில் இருந்து
எனக்காக பிரார்த்தனை செய்கிறாயோ ?
அல்லது
உந்தன் ஆத்மா எங்கோ பயணித்து
நேற்று எந்தன் மகளின் உயிரில்
மீண்டும் மறுபிறப்பு எடுத்தாயோ ?

ஆர்வமுடன் மருமகனிடம்
பேரனின் பெயர் கேட்டேன்
மகிழ்ச்சியில் வியந்தேன் அப்பா !
உந்தன் இனிய பெயர் தான்
என் பேரனுக்கும் !

 - N Suresh Chennai

Related Articles

இன்டர்நெட் காதல்

முதுமை

சாவோடிவை போகும்!

நிலுவை

தத்துவம்

இலவு காத்த கிளியாக....!

எம்மவர் மட்டும் எங்கே...?

ஓ... இதுதான் காதலா !

வயல் வெளி

கேணல் கிட்டு