home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 73 guests online
manaosai.com
அலாவுதீனும் அற்புத அனுபவமும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 26 January 2020 09:30
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம்.  இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது.

நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில்  பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள்.  ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்பு.  ஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னது ‘காசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்’ என்று.
Last Updated on Sunday, 26 January 2020 09:35
Read more...
 
நியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 02 January 2019 22:19
Ahilan Karunaharanநியூசிலாந்து நாட்டின் இந்த வருடத்திற்கான சிறந்த நாடக எழுத்தாளருக்கான The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு கிடைத்திருக்கிறது.

யார் இந்த அகிலன் கருணாகரன்? The Bruce Mason விருது என்பது என்ன? என்ற கேள்விகள் உங்களில் யாருக்காவது இருக்கலாம். அதனால் முதலில் The Bruce Mason விருதைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். பிறகு அகிலன் கருணாகரனது விடயத்துக்கு வருகிறேன்.

1983 ஆம் ஆண்டு முதல் The Bruce Mason விருதானது ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் திறமைக்கான அங்கீகாரமாக நியூசிலாந்து நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் எழுத்தாளருக்கு 10,000 நியூசிலாந்து டொலர்கள் விருதுடன் சேர்த்து அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு எழுத்தாளரை ஊக்குவிப்பதற்கும் அவரது முயற்சிகளின் மேலதிக தேவைகளுக்காகவும் இந்தப் பணம் அவருக்கு உதவலாம் என்ற அடிப்படையிலேயே இந்தப் பணப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் இந்த விருதானது நியூசிலாந்து நாட்டின் பிரபலமான எழுத்தாளர்களான Hone Kouka, Briar Grace-Smith, Jo Randerson, Victor Rodger, Arthur Meek, Sam Brooks and Mīria George ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வரிசையில் 2018இல் இப்பொழுது அகிலன் கருணாகரனும் இணைந்திருக்கிறார்.

பொதுவாகவே ஈழத்துக் கலைஞர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை. அதே நேரம் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அந்தந்த மொழிகளில் தங்கள் கலைகளை வெளிப்படுத்துகின்ற பொழுது அவர்கள் எங்களிடம் இருந்து அந்நியப்பட்டும் போய் விடுகிறார்கள். அகிலனது நிலையும் இதில் அடக்கம்.
Last Updated on Thursday, 03 January 2019 20:47
Read more...
 
விண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே!! PDF Print E-mail
Eelam - Heroes
Written by குமணன் முருகேசன்   
Friday, 23 November 2018 14:57
Morris01.05.1989 இதே நாள், இதற்கு முதல் நாளில் பருத்தி மண் தன் குதூகலத்தை இழந்து கொண்டது, யாரும் ஏதிர்பார்க்கவும் இல்லை, எனக்கோ வயது பத்து. சப்பாத்தி மணம் எங்களது ஒழுங்கையெல்லாம் மணந்தது. எங்கள் வீட்டு நாய்க்கோ அந்த மணம் பிடிக்காது. ஆனால் யார் வந்தார்கள் என்று சிறு ஏக்கம். பழகியவர்கள்தான் அங்கும் இங்குமாகத் திரிந்தார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல சப்பாத்தியின் வேவுகள். சறம் கட்டியவங்களைக் காட்டிக் கொடுக்கத் திரிந்த கூட்டங்கள்.

ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டில் சைவம். எனது மூத்த அண்ணா  "பின்னேரம் ஜந்து மணியளவில் பத்து பார்சல் சாப்பாடு வேணும்" என்றார். அம்மாவும் "ஓகே,  எல்லாம் எங்கள் பிள்ளைகள்தானே" என்று கருவாடும் வெந்தயமும் போட்டு குழம்பும் வைத்து, கூப்பன் மா பிட்டும் அவித்துக் கொடுத்து விட்டார். 

"அம்மம்மா வீட்ட போறன்" எண்டு சொல்லிப் போன  எனது அண்ணா இரவு முழுவதும் வரவில்லை. அப்பா வேலியால் எட்டி எட்டிப் பார்த்து "மூத்தவனை இன்னும் காணேல்லை" எண்டு அம்மாவிடம் புறுபுறுத்தார்.

இந்த நாள் பின்னேரம், நானும் தம்பியும் ஆத்தியடி ஒழுங்கையில் கிறிக்கற் விளையாடிக் கொண்டு இருந்தோம். தாங்கள் நாளை சாகப்போறோம் என்று தெரிந்தோ தெரியவில்லை. எங்கள் கூட அவர்கள் விளையாடினார்கள். எங்களுக்கு அவர்களைக் கண்டாலே சந்தோசம்தான்.
Last Updated on Sunday, 25 November 2018 09:48
Read more...
 
காலத்தால் கரைந்தவை PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by மாதவி   
Monday, 31 December 2018 06:25
நேற்று பக்குவமாய் எடுத்து நாளைக்கும் தேவை எனச் சேர்த்து வைத்த எத்தனையோ பொருட்கள் இன்று பயனற்றுப் போயின. இன்றும் நாம் நாளைக்கு எனச் சேர்க்கும் பொருட்கள் என்னவாகுமோ என்ற ஒரு ஏக்கம் முன்பு சேர்த்து பயனற்று இருப்பதைப் பார்க்கும்போது ஏற்படுகின்றது.

வீட்டின் மூலைமுடுக்கு எல்லாம் புத்தகங்கள், பத்திரிகைத் துண்டுகள் அதில் எத்தனையோ எத்தனையோ ஆரோக்கியமான கட்டுரைகள் படங்கள். இவை அனைத்தையும் நாளைய சந்ததிக்கு ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்றால்… அவர்கள் அதனை வாசித்துப் புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லை. அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் சேர்க்கும் பொருட்களின் பெறுமதி தெரியும். இப்போ நாம் சேர்த்தவற்றில் பல Google க்குள் சென்று தேவையானவற்றை எடுக்க முடிகிறது. கட்டுக்கட்டாக இருக்கும் காகிதங்களுக்குள் புரட்டிப்புரட்டி தேடுவதை விட, இது இலகுவானதுதான். இருந்தாலும் நாம் சேரத்தது எல்லாம் அங்கு இருக்கும் என்பதற்கு இல்லை. நாம் சேர்த்தவை ஒரு புறமிருக்க நாம் அன்றாடம் பாவித்த பொருட்களும் பாவனை இழந்து நிற்கின்றன.
Last Updated on Wednesday, 02 January 2019 22:31
Read more...
 
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ… PDF Print E-mail
Eelam - Heroes
Written by சிவா தியாகராஜா   
Thursday, 26 July 2018 09:01
மாவீரன் லெப்டினன்ட் வெங்கடேஸ் (சண்முகசுந்தரம் ஜீவகரன்) நினைவாக

படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன்.

அவன் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் „பசிக்குதணை. கெதியாச் சமையுங்கோணை“ என்று உரிமையோடு என்னிடம் சொல்லுவான். சமைத்ததும் சாப்பிடுவான். நான் அவனுக்காகவும் அவன் போன்ற மற்றைய போராளிப் பிள்ளைகளுக்காகவும் கடலை, பருப்பு, முறுக்கு... என்று எல்லாம் சுட்டும், பொரித்தும் வைத்திருப்பேன். அவன் வரும் போதெல்லாம் அவைகளை மிகவும் விரும்பி ருசித்துச் சாப்பிடுவான். தன் வீடு போலவே என் வீட்டில் நடந்து கொள்வான்.

எனது மூக்குக் கண்ணாடியை நான் கழற்றி வைத்தால் போதும், அதை எடுத்துப் போட்டுக் கொண்டு அயர்ண் பண்ணி வைத்திருக்கும் சேர்ட் களில், காசைப் பொக்கற்றினுள் வைத்தால் வெளியில் தெரியக் கூடிய வகையிலான ஏதாவதொரு மெல்லிய சேர்ட்டையும் தெரிவு செய்து எடுத்துப் போட்டுக் கொண்டு, என்னிடம் தாள் காசு தரும்படி கேட்டு வாங்கி அதைப் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மொறிஸின் இளையக்காவிடம் „இளையக்கா, இப்ப என்னைப் பார்க்க அறிவாளி மாதிரி இருக்குதோ?“ என்று கேட்பான்.

அனேகமான சமயங்களில்
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…

என்ற பாடல் கசற்றைப் போட்டு விட்டு, றேடியோவுக்கு முன்னால் அமர்ந்து, மேசையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு, பாடலைக் கேட்ட படி அழுது கொண்டிருப்பான்.
Last Updated on Friday, 14 September 2018 22:06
Read more...
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Page 1 of 3