Literatur -
கவிதைகள்
|
Written by திலீபன்
|
Wednesday, 15 July 2009 04:15 |
புயல் அடித்துச் சாய்ந்த மரம் போல் நானும் கட்டிலில்
விம்மி விம்மி அழுகின்றேன் பகல் இரவு முழுவதும் அழுகின்றேன்
வேதனையைத் தாங்க முடியவில்லை கையை அசைக்க முடியவில்லை இதயம் நின்று விடும் போலுள்ளது
என்னவென்று தெரியாத பயம் என்னை ஆட்கொள்கிறது சாவு என்னை அழைக்கிறது போலுள்ளது
என் அழகிய முகம் சிரிப்பு எல்லாம் வாடி விட்டன
எனக்கா..! இந்த நிலைமை..! நம்ப முடியவில்லை இதுவா..! வாழ்க்கை..!
எரியும் மெழுகுவர்த்தியின் நிலையா எனக்கும்
இளம் மனிதர்களே! வீண் கனவுகள் காணாதீர்கள் வீண் ஆசைகள் கொள்ளாதீர்கள்
இன்று எனக்குள்ள விதிதான் நாளை உங்களுக்கும்
இன்று பெரிதாகத் தோன்றுவதெல்லாம் நாளை சாம்பலாகி விடும் இன்று பூத்து அழகாக இருப்பதெல்லாம் நாளை மண்ணாகி விடும்
இந்த வாழ்க்கை என்பது ஒரு கெட்ட கனவைப் போன்றது நீர்க் குமிழியைப் போன்றது.
இளம் மனிதர்களே! வீண் கனவுகள் காணாதீர்கள் வீண் ஆசைகள் கொள்ளாதீர்கள்
திலீபன் யேர்மனி 1997
|
Last Updated on Wednesday, 15 July 2009 08:01 |