Eelam -
தொன்மை
|
Written by சுகுணன்
|
Sunday, 09 August 2009 21:23 |
கிளிநொச்சி அக்கராயன் குள காட்டுப் பகுதியில் 3000 ஆண்டுகள் வரை தொன்மையான தமிழரின் பெருங்கற் காலத்துக்குரிய கற்குவை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் குளத்தின் அலைக்கரைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நிலை ஆற்றுக் கரையினில் கற்குவை ஈமச்சின்னங்கள் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழரின் சடலம் புதைக்கப்பட்டு அதனைச் சூழ முட்டை வடிவில் இடைவெளியில் கற்கள் அடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் கற்குவை ஈமச்சின்னங்களாகும். நிலை ஆற்றுக்கரையில் 9 கற்குவை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதவிர இப்பகுதியில் சிறிய தட்டைக்கற்களால் உருவாக்கப்பட்ட கற்றகடு ஈமச்சின்னங்களும் உலோக உருக்கு உலைகளும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இவையுடன் 'நாக", 'தட" என்ற சொற்களையுடைய தொல் பிராமி தமிழ் எழுத்துக்களைக் கொண்ட உலோக முத்திரையும் ந.குணரட்ணத்தினால் நிலை ஆற்றுக் கரையில் எடுக்கப்பட்டன.
தமிழர் தாயகப்பகுதியில் மிக அதிகளவில் தொல்பொருட்கள் இங்கே காணப்படுகின்றன. இதற்கு அண்மையாக ஐந்து மைல் தொலைவில் ஆனைவிழுந்தான் தொல்மையம் கண்டுபிடிக்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து சுகுணன் 23.9.2003
|