home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 119 guests online
Stephen William Hawking - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் PDF Print E-mail
Blogs - Latest
Written by Chandra   
Wednesday, 14 March 2018 08:12
Stephen William Hawking 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) 08.01.1942 இல் இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட்டில் பிறந்தார். இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.

அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)தமிழ் பெயர்ப்பு, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் பலரையும் கவர்ந்தன.

இவர் எழுதிய நூல்கள்

  • காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)
  • கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)
  • பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)

Quelle : Tamil Wikipedia
 - Stephen William Hawking
Last Updated on Monday, 09 April 2018 21:20