home loans
Literatur


ஜடாயு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Sunday, 11 September 2016 08:00
சூரியன் இறங்கி வெக்கையை விதைத்துக் கொண்டிருக்கும் எமது எல்லாக் கடலோரக் கிராமங்களையும் போல இதுவும், தட்டி விழுத்தவும், தூக்கி அணைக்கவும், இதயம் சுமக்கும் மனிதர்கள் வாழும் சின்னக்கிராமம். கிழக்குத் தொடுவானம் கடலின் மடியிலும், மற்றைய திசைகள் பூராவும் விரிந்து நின்ற பனைகள் தலையிலும் வானம் தாங்கும் அந்த ஊரில் ஜந்து கல்வீடுகளைத் தவிர மிச்சமிருந்த முப்பத்திச் சொச்சம் வீடுகளும், கிடுகும், பனையோலையும் வேய்ந்த மண்வீடுகள். கடலும், பனையும், ஓயாத உடலுழைப்புமே அக்கிராம மக்களின் வயிற்றுக்கான நம்பிக்கைகள்.

நிலவில்லாத வானத்தில், பரந்து காலித்துக் கிடந்த நட்சத்திரங்களின் தெறிப்பில் இருட்டுக் கசிய, காற்றுத் தூக்கிவரும் கற்கோவளக்கடலின் இரைச்சலும், கூரைக்கு மேலால் அவ்வப்போது கத்திச் செல்லும் இரவுப்பறவைகளின் சத்தமும், இரவின் அமைதியைக் கீற உறங்கிக் கிடந்தது ஊர்.

சடாய்த்து வளர்ந்த மாமரத்தின் கீழிருந்த சுப்புக்கிழவனின் வீட்டில் மட்டும் இன்னமும் வெளிச்சம் தெரிந்தது. மாரிமழைக்கென சாய்வு இறக்கிய கிடுகுக் கொட்டகைக்குள் வாங்கில் போட்டு, கிழவனை வளத்தியிருந்தார்கள். அடங்கி விடுவது போன்ற கேவலுடன் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கும் ஒவ்வொரு தரமும், "என்ர குஞ்சியய்யா" என யாராவது ஒரு சொந்தம் அழத்துவங்க கிழவனின் மூடியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து காதுச்சோணைக்குள் இறங்கும். பின்னர், வாய்க்கால் நீர் போல மூச்சு சீராக ஓடத்துவங்கும்.
Last Updated on Tuesday, 20 September 2016 06:44
Read more...
 
நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து.. PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Monday, 05 September 2016 07:20
ஹிந்து மனிதாபிமானம் தொடர்பாகவும், அதனடியாகப் பிறக்கும் திரு. நீலகண்டன். அரவிந்தனின் கருத்தியல் பற்றியும் சில விசயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றை விவாதத்தளத்தில் பதிவுசெய்ய எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் விவாதத்தில் எந்தளவுக்கு நாம் நேர்மையைக் கடைப்பிடிக்கிறோம் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. எமது கருத்தை எதிர்க்கருத்தோன் மறுக்கும்போது எமது ஈகோ துள்ளி எழுந்து கருமமாற்ற வெளிக்கிட்டுவிடுவதால் கருத்தாடப்படும் எந்த விசயங்களையும் ஆற அமர உள்வாங்கமுடியாத துரதிர்ஸ்டம் ஏற்பட்டு விடுகிறது.

அண்மைக்காலமாக, வீரசவார்க்கர் தொடர்பாக திண்ணை வாசகர்தளத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாறல்களில் உணரப்பட்ட விடயமென்னவெனில், கடந்தபல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, மதக்கலவரம் என்ற கொடியநோய் எல்லாவற்றிற்கும் சர்வநிவாரணமாக ஹிந்துத்துவம் உட்செரிக்கப்பட்டு, பாரத தேச மக்கள் ஹிந்துத்துவ அணிக்குள் திரட்டப்பட வேண்டும் என்று அரவிந்தன் தன் மாறாக் கருத்தாக முன்வைக்கிறார் என்பதே.

ஆங்கிலேய காலனியாதிக்க எதிர்ப்பை, இந்துத்துவ தேசியமாக மாற்றியமைத்த தலைவர்களான திலகர், லஜபத் ராய், சவார்க்கர், போன்றவர்களின் சாதி, மத நெகிழ்வாக்கச் சிந்தனைகள் இன்று அரவிந்தன் போன்றோருக்கு ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகவும், அத்தலைவர்களின் இலச்சினையை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் போலித் தேசிய, அரசியல், மதம் சமூக சிந்தனையாளர்களைப் புறந்தள்ளுவதற்கு நெம்புகோலாகப் பயன்படும் என்றும் நினைப்பதாக நான் கொள்கிறேன்.
Last Updated on Tuesday, 20 September 2016 06:47
Read more...
 
கொஞ்சம் சிரியுங்கள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 04 September 2016 08:15
நகைச்சுவை என்பது சிரிக்க மட்டுமல்லாது ரசிக்கவும் செய்யும். சில சமயங்களில் சிந்திக்க வைத்து சமூக சிந்தனையைத் தூண்டியும் வைக்கும். தமிழக சினிமாவில் நகைச்சுவைக்கு என பல மேதைகள் இருந்திருக்கிறார்கள். தங்களுக்கான தனிப் பாணிகளை அமைத்து நகைச்சுவையில் முத்திரை பதித்து விட்டும் சென்றிருக்கிறார்கள். கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ், பாலையா, எம்.ஆர்.ராதா,கே.ஏ. தங்கவேலு, ஏ.கருணாநிதி, சுருளிராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன்… என அந்த நகைச்சுவைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கலைவாணரின் நகைச்சுவை மென்மையானது. அவரது நகைச்சுவையில் சமூகம் சம்பந்தமான கருத்துகள் இருக்கும். ‘மணமகள்’ என்ற படத்தில் ஒரு காட்சியில், கலைவாணரை ஒருவர் சந்திப்பார். அடுத்த வீட்டுக்காரர், பக்கத்து தெருக்காரர், மற்றவர்களின் குடும்பம் பற்றியெல்லாம் குறை சொல்லிக்கொண்டிருப்பார். கலைவாணர் அவரை இடைமறித்து, “சரி.. உன் பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்பார். அந்த நபர், தன்னிடம் இருக்கும் பணத்தின் தொகையைச் சொல்வார். அதற்கு கலைவாணர், “அப்படிச் சொல்லக்கூடாது. எவ்வளவு ரூபாய் நோட்டா இருக்குது? என்னென்ன நோட்டு? சில்லறைக் காசு எவ்வளவு இருக்குது? எத்தனையெத்தனை நயா பைசா? என்றெல்லாம் சரியா சொல்லணும்” என்பார். “இருங்க எண்ணிப்பார்த்து சொல்றேன் என்று அவர் சொல்ல, கலைவாணரோ, “ஊகும்.. எண்ணாமல் சொல்லு” என்பார். அதற்கு அந்த நபர், “அது எப்படிங்க.. எண்ணிப் பார்த்துதானே சொல்லமுடியும்” என்று கேட்பார். கலைவாணர் அவரிடம், “உன் பாக்கெட்டுல நீ வச்சிருக்கிற பணத்தை எண்ணிப் பார்த்துதான் சரியா சொல்ல முடியும்ங்கிறே.. ஆனா, அக்கம் பக்கத்து வீட்டு விவகாரத்தையெல்லாம் எண்ணிப்பார்க்காம நீயா சொல்லிக்கிட்டே போறியே, என்ன இது?” என்று சொல்லி தனது நகைச்சுவையிலும் எங்களுக்கும் செய்தி சொல்லியிருப்பார்.
Last Updated on Wednesday, 18 January 2017 09:14
Read more...
 
ஓநாய்க்கூட்டம் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Sunday, 04 September 2016 06:41
கட்டுக்கயிறை அறுத்துக்கொண்டு ஓடித்திரிகிறது கன்றுக்குட்டி. “மது..மது” என்ற என் குரலே அவளுக்கு உற்சாகமூட்டுவதாக, வரவேற்பறையின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு எறிந்த பந்துபோல ஓடுவதும், சாடுவதும் இடைக்கிடை என்னருகே வந்து இளைப்பாறுவதுமாக மான் பாய்ந்து கொண்டிருந்தாள் என் மகள் மீரா.

இவள் இந்த பனிப்பூமியில் ஜனிப்பதற்கு முன்னர், பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட காலைவணக்கம், சுகவிசாரிப்புகளையெல்லாம் நிறுத்திவிட்டு, பரமவைரியைப் போல முகம்தூக்கித் திரிகிறார் எங்களுக்கு நேர்கீழே குடியிருக்கும் போலந்துக்காரரான பீற்றர் வரவரச்சி. பகல்பூராவும் நித்திரை கொண்டுவிட்டு மாலையில் அவள் துயிலெழும்பி -பலகைத்தரையில்- தொம்தொம்மென ஓடிவிளையாடத் துவங்க வேலை அலுப்புடன் தன் வீடு திரும்புவார் பீற்றர் வரவரச்சி.
Last Updated on Tuesday, 20 September 2016 06:43
Read more...
 
அகதி மண் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Sunday, 04 September 2016 06:39
சுளீரென விழுந்து உடம்பில் வேதனை உண்டாக்கும் மாயச் சாட்டை வீச்சுக்கு வேகமெடுத்து ஓடுவது போலத்தான் வேலைநாட்களின் வழமைகள். அலாம் அடிக்க உறக்கம் கலைந்து, படுக்கையிலிருந்து உடம்பை உரித்ததும் மனசு நிமிடங்களை எண்ணத் தொடங்கிவிடும். பஸ் வரும் நேரம். வேலை துவங்கும் நேரம். சாப்பாட்டு நேரம். படுக்கும் நேரம். மறுநாள் அலாம் சத்தம். இப்படியே இதுவொரு நேரத்தைத் துரத்தி ஓடும் வாழ்க்கையாகிப் போய்விட்டது. ஆனால் இதற்கெல்லாம் இடைவேளைபோல வரும், வந்து சடுதியில் மறைந்து போகும். வார இறுதி நாட்கள்.

இன்று சனிக்கிழமை. லீவுநாள். இருந்தும் வழமையாக அலாம் தட்டி எழுப்பும் நேரத்திற்கு மூளை விழித்து உறக்கம் கலைந்து விட்டது. லீவுநாட்களில் செய்து முடிக்கவென ஒதுக்கியிருக்கும் அலுவல்களின் பட்டியலில் எதை முதலில் ஆரம்பிப்பது எவற்றையெல்லாம் அடுத்த சனிக்கிழமைக்கு தள்ளிப் போடுவது என படுக்கையிலிருந்தபடியே யோசித்தான் சேகர்.
Last Updated on Tuesday, 20 September 2016 06:45
Read more...
 
மகாத்மாவின் பொம்மைகள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Friday, 02 September 2016 08:15
பாபுஐியை, அவரின் மனதுக்கினிய பல நண்பர்களை இழந்தாயிற்று. சபர்மதி, வார்தா, யமுனைக்கரை, ராஐாஐிவீடு எல்லாம் போய் நாளாகி விட்டன. பாபுஐியின் சில நண்பர்களும் வரத்துப் பறவைகளாக வந்து போகின்றனர். மனத்தில் ஒன்றிய அன்பையும் சத்தியத்தையும் குருஐியுடன் வழியனுப்பி விட்டனர். கத்தியவார் கடற்கரையிலிருந்து உஷ்ணம் தாங்கி வீசும் உப்புக்காற்று, தேகத்தை உக்க வைக்கிறது. நீண்ட ஆண்டுகள் குந்திய நிலையில் இருந்து அலுப்பேறி, எழுந்து திரிந்து தேசங்களை, ஷேத்திராடனங்களைப் பார்த்து கர்மா முடித்து விடவேண்டுமென மூன்றுக்கும் சமநேரத்தில் தோன்றி விட்டது. நினைவாலயத்திலிருந்து உடம்பைப் பெயர்த்துக் கொண்டு எழும்பி நடந்தன.

நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஏறக்குறைய அறுபது, எழுபது ஆண்டுகள் புலன்களை மறைத்து வைத்திருந்த கைகள் வேரோடி தசைநார்கள், இரத்தநாடிகள் சுருங்கி, விறைத்து விட்டன. வீதியில் அவை நடக்கும் போது குத்தி அகலும் பொதுக்கண்களில் பாபுஐியினது ஞாபகம் வராமல், மாறாக ஏளனமும், நக்கலும் தொனித்தது, மூன்றுக்கும் பெருத்த சங்கடமாக இருந்தது.

பயணவழியில் தேவாலயமோ, மசூதியோ தென்பட்டால் உள்ளே நுழைந்து கைகளை சுயாதீனமாக இயங்க வைத்து மேலே நடப்பதென தீர்மானித்தன. எதிர்வரும் ஒவ்வொரு கிராமத்திலும் பற்பல ஆலயங்கள். விஷ்ணு, ராமர், சிவன், இன்னும் பல இந்து வடிவங்களைத் தாங்கிய கோயில்களே வழிமறித்தன. மதநல்லிணக்கம் பேணும் இந்தியாவில்தானா நடக்கிறோம் என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒருமித்த முடிவில் இந்துக் கோவிலுக்குள் இனிமேல் அடிவைப்பதில்லை என்று 1948 ஐனவரி 30 இல் எடுத்த சபதம் ஞாபகத்தில் நின்றதால் மெளனமாக நேரே நடந்தன.
Last Updated on Tuesday, 20 September 2016 06:45
Read more...
 
More Articles...
<< Start < Prev 11 12 13 14 15 16 17 18 19 20 Next > End >>

Page 11 of 68