home loans
Literatur


உயிர் விளையாட்டு PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Friday, 02 September 2016 08:11
அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.

முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க,

‘உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் இழவைக் கொஞ்சம் குறைச்சால் எல்லாம் சரியாயிடும். எனக்காக இல்லாவிட்டாலும் இவன் பாரதிக்காகிலும் விட்டுத் துலையுங்கோ ‘

என்னும் புத்திமதியும், மனஉளைச்சலுமாக, வியர்வை பூத்திருந்த மூக்கைத் துடைத்து விட்டு, உள்ளே இருக்கும் குழந்தையைத் தடவும் வாஞ்சையுடன், வளர்ந்து சரிந்திருந்த வயிற்றைச் செல்லமாகத் தடவினாள்.

குனிந்து வயிற்றைப் பார்த்து ‘நெளியுறான் ‘ என்றாள்.

Last Updated on Tuesday, 20 September 2016 06:46
Read more...
 
வழித்துணைவன் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by ஜெயரூபன் (மைக்கேல்)   
Friday, 02 September 2016 08:07
வீதியின் பார்வைக் கோணத்திற்கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது. இடது ஓரத்திலிருந்து வந்த விளம்பரவாசகம் வலது கரையில் மறைந்து போக மீண்டும் மீண்டும் புதிதாக எழுத்துக்கள் இடது கரையிலிருந்து பிறந்து வந்தன. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனத்திலிருந்து இப்படியே மறைந்து போய்க்கொண்டிருந்தால் மீட்டிப் பார்ப்பதற்கு கவலைகள் ஏது.. ? கவலைவிசாரமற்ற வாழ்வு ஆரோக்கியமாக நீண்டு போகும். அறுபது எழுபது வயதைத் தாண்டிக் குதிக்கவும் கூடும். ஆனால் இந்த முப்பது வயதில் என்னிடம் எவ்வளவு தளர்வு. காரணமில்லாமல் கோபம் வேறு மூக்கிலே முட்டுகிறதே…

சற்றும் இரக்கமில்லாமல் இயங்க மறுத்த வோசிங் மெஷின் மேல்தான் இன்று முதலில் கோபம் வந்தது. பின்னர் கழிவுகள் வெளியேறாமல் அடைத்து மெஷின் இயங்க மறுக்க, கோப்பைகளை கொண்டு வந்து குவித்துக் கொண்டிருந்த பையன் மீது தாவியது. கடைசியில் இந்தச் சுழலில் சிக்கிய என்மீதே வந்து இறுகி நின்றது. ரெஸ்ரோரண்டுக்குள் சம்பிரதாயமாக பரிமாறிக்கொள்ளும் காலைவணக்கம், சுகவிசாரிப்புகள் எல்லாம் வேலை ஏவுவதற்கான குழையடிப்புகளாக கண்ட அநுபவத்தில், வணக்கம் கூறுவதை தவிர்த்து விட்டதன் பின்னர், என்மீது செவ்வுக்கு மர்மமான பகையுணர்வு வந்து விட்டது. அதன் பலன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாகவே மாய வேண்டியதாயிற்று.

அறுநுாறு பேர்களுக்கு மேல் சாப்பிட்ட எச்சில்தட்டுக்களை இன்று தனியாளாகவே கழுவிய களைப்பும், எரிச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது. இரவு பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னிலிருந்து.
Last Updated on Tuesday, 20 September 2016 06:46
Read more...
 
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by மூனா   
Monday, 25 July 2016 09:31
நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது படிப்புத்தான் எங்களது மூலதனம் என்று எங்கள் பெற்றோர்களால் சொல்லி வளர்க்கப் பட்டதால் விளையாட்டுக்களில் கலைகளில் எங்களால் அதிகளவு கவனம் செலுத்த முடியவில்லை. என்னென்ன திறமைகள் எங்களிடம் இருந்தன என்பதை நாம் கண்டறிந்து வெளியே காட்டிக்கொள்ள அன்று எமது நாட்டிலும் எள்ளவும் வாய்ப்பு இருக்கவில்லை. ஒரு விதத்தில் பார்த்தால், விளையாட்டுத்துறையை பற்றி பெரிதாக யாருமே கண்டு கொள்ளவில்லை எனலாம். படித்துக் கொண்டே விளையாடும் உத்தி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சத்தமாகவே சொல்லிக் கொள்ளாம்.

எங்களது துடுப்பாட்டங்கள், உதைபந்தாட்டங்கள், கைப்பந்தாட்டங்கள் எல்லாமே பாடசாலையை விட்டு நாங்கள் வெளியே வந்த பொழுது எங்களை விட்டு வெளியேறி விட்டன.

இந்த நிலை இருந்தும் கூட, ஐம்பதுகளில் இளவாளையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியிருக்கின்றான். 1952இலும் 1956இலும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்காக உயரம் பாய்தல் போட்டியில் பங்கு பற்றிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்தான் அந்த இளைஞன். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமன்றி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் 1958இல் நடந்த ஆசிய விளையாட்டில் உயரம் பாய்தலில் 2.03 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கம் வாங்கி வந்திருக்கின்றார்.
Last Updated on Monday, 05 September 2016 07:17
Read more...
 
வாடைக்காற்று - செங்கை ஆழியான் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Sunday, 05 June 2016 16:59
வாடை பெயர்ந்து விட்டது. நெடுந்தீவுத் தெற்குக்கடற்கரையில் செமியோனின் வரவுக்காக பிலோமினா காத்திருக்கிறாள்.

மூன்று வருடங்களாக, வாடைக்காற்று பெயரத் தொடங்கியதும் தந்தையுடன் ஒரு தொழிலாளியாக வந்து வாடி அமைத்து, மீன் பிடித் துச் சென்ற செமியோன் கடந்த வருடம் தானே சம்மாட்டியாக வந்த போதுதான் அவனுக்கும் பிலோமினாவுக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது. வாடை முடிந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பும் போது அவளையும் தன் மனைவியாகத் தன்னோடு அழைத்துச் செல்லும் நினைப்புடன்தான் செமியோன் அவளுடன் பழகினான். ஆனால் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்துவுக்கும், செமியோனுக்கும் ஒத்து வரவில்லை.

செமியோன் ஒரு சம்மாட்டி. பிலோமினாவின் குடும்பம் செமியோன் போன்ற சம்மாட்டிகளிடம் வேலை செய்யும், அந்தத் தெற்குக் கடற்கரையிலேயே வாழும் ஒன்பது தொழிலாளக் குடும்பங்களில் ஒன்று. பிலோமினாவுக்கும், செமியோனுக்கும் இடையிலான உறவைச் சாக்காக வைத்து செமியோனைப் பயன்படுத்த முனைந்தான் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்து. அது சண்டையாகி இவர்களது காதலுக்கும் முட்டுக்கட்டை வந்து விட்டது.

போனமுறை செமியோன் போகும் போது இவளையும் கூட வரும்படிதான் கேட்டான். அம்மா, அப்பா, அண்ணாவின் சம்மதம் பெறாமல் வரமுடியாது என்று மறுத்து விட்டாள். இப்போது மறுகிக் கொண்டு, இம்முறை செமியோன் விரும்பியது போல அவனுடனேயே போய் விடவேண்டுமென்ற நினைப்புடனும், தீராக் காதலுடனும். காத்திருக்கிறாள்.
Last Updated on Tuesday, 22 November 2016 10:08
Read more...
 
இருதரக் காதல் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by மாதவி   
Wednesday, 11 May 2016 10:16
கிறிஸ்மஸ் பாட்டி இன்று மாலை. நாம் வேலை செய்யும் அந்தப் பிரமாண்டமான கார் கம்பனியின் ஊழியர்கள் ஒன்றாகக் கலந்து ஆடிப்பாடி உண்டும், குடித்தும் சிலர் அதற்கும் கொஞ்சம் மேலேயும் மகிழும் தினம்.

பல வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும், கடந்த 15 வருடங்களாக இந்தப்பாட்டிக்கு சென்றது கிடையாது. இப்போ நாம் வேலை செய்யும் இடத்தில் மாதம் ஒருவர் எதோ ஒரு மரணச் செய்தியை வந்து சொல்லியபடியே இருப்பார். இந்தச் செய்தி இன்று அல்ல அன்றும் இருந்திருக்கும், ஆனால் அதனை கேட்கும் வயதோ! அல்லது அதனை உள்வாங்கும் மனமோ!! அப்போ இந்த இதயத்திற்கு இருந்ததில்லை. இளமை! இளமை!! இளமை!!! இதற்கும் முதுமைக்கும் -மை- பொதுவாக இருக்கின்றது. இந்த மை மட்டும் இல்லை என்றால் இங்கு முக்கால்வாசிப்பேர் முதுமைதான்.

இந்த முதுமை சில நேரங்களில் தத்துவம் பேசும், பல சமயங்களில் தத்தளிக்கும். ஒரு கவிஞர் சொன்னார் இளசுகள் வயசுக்குவர, அனுபவிக்கத் துடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். முதியவர்கள் வயசுபோக எல்லாம் முடியப்போகுதே என்ற பயத்தில் இளசுகளையும் சிலசமயம் முந்திக்கொண்டு ஓடுகிறார்கள்.

இப்படியாக அடுத்த ஆண்டு இந்த கிறிஸ்மஸ் பாட்டியில் கலந்து கொள்ள நான் இருப்பேனோ என்ற அச்சத்தில்தான் பல வருடங்களாக கலந்து கொள்ளாத இந்த பாட்டியில் இன்று கலந்து கொள்கின்றேன்.
Last Updated on Wednesday, 11 May 2016 10:28
Read more...
 
முற்றத்து ஒற்றைப் பனை - செங்கை ஆழியான் PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by சந்திரவதனா   
Monday, 09 May 2016 05:52
செங்கை ஆழியானின் கதைகளை பாடசாலைக் காலங்களில் வாசித்திருக்கிறேன். அவைகளை இப்போது வாசிக்கும் போது அவைகள் மீதான பார்வைகளிலும், வாசிக்கும் போதான உணர்வுகளிலும் பலத்த வித்தியாசங்கள்.

முற்றத்து ஒற்றைப் பனையை நூலகத்திலிருந்து எடுத்தேன்.

மிக இயல்பான எழுத்து நடை. சரளமான பேச்சுத் தமிழ். கூடவே இழைந்தோடும் நகைச்சுவை. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். ஒரு இடத்தில் கூட சலிப்புத் தட்டவில்லை.

ஒற்றைப்பனை யாழ்ப்பாணத்தில் பல வீடுகளின் முற்றங்களில் வீற்றிருந்திருக்கும். வண்ணார்பண்ணையைத் தளமாகக் கொண்ட ஒரு வீடு கதையில் இடம் பெற்றிருந்தாலும், என் மனக்கண்ணில் எனது பாட்டாவும், பெத்தம்மாவும்(அம்மம்மா) தமது வீடு, வாசல், காணிகளை பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சீதனமாகவும், அன்பளிப்பாகவும் கொடுத்து விட்டு கடைசிக் காலங்களில் ஒரு சிறுதுண்டுக் காணிக்குள் ஒரு சின்ன வீடு கட்டி வாழ்ந்த வாழ்க்கையும், அந்த வீட்டில் ஆடி அசைந்து கொண்டிருந்த ஒற்றைப் பனைமரமுமே காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன.
Last Updated on Sunday, 02 October 2016 10:16
Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 65