Samugam -
பெண்கள்
|
Written by Chandra
|
Saturday, 16 April 2016 21:43 |
பெண்விடுதலை பற்றிய புரிந்துணர்வு இன்றைய காலகட்டத்தில் சற்றுப் பிழையானதாகவே இருக்கிறது. பெண்கள் பல வழிகளிலே முன்னேறி இருக்கிறார்கள்தான். அதை இல்லையென்று நான் சொல்லவில்லை. எங்கள் அம்மம்மாமாரின் வாழ்க்கை முறையை விட எங்கள் அம்மாமாரின் வாழ்க்கை முறையில் வித்தியாசமும், முன்னேற்றமும் தென்பட்டன. எங்கள் அம்மாமாரின் வாழ்க்கை முறையை விட எங்கள் வாழ்க்கை முறையிலே இன்னும் வித்தியாசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எங்கள் வாழ்க்கை முறையை விட எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முறையில் இன்னும் அதிக முன்னேற்றங்கள் பரிணமிக்கின்றன.
இன்றைய ஆண்பிள்ளைகள், குறிப்பாக ஐரோப்பியாவில் வளர்ந்தவர்கள் தமது குடும்பம் என்று வரும்போது குழந்தைகளைப் பார்ப்பதிலிருந்து வீட்டிலுள்ள பல்வேறு வேலைகள் வரை மனைவியோடு பங்கெடுத்துச் செய்கிறார்கள். ஆனாலும் இன்ஸ்ரிங்ற் (Instinct) என்ற ஒன்று இருக்கிறதே. அது அவர்களை அறியாமலே சில விடயங்களை அவர்களின் மூளையில் பதித்து வைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் வெளியில் வர இன்னும் சில காலங்கள் தேவை.
இதே போலப் பெண்களின் மூளையிலும் சில விடயங்கள் பதியப் பட்டிருக்கின்றன. அவைகளிலிருந்து பெண்களும் மீள வேண்டும். தான் அடிமைப் பட்டு இருக்கிறேன் என்பதை ஒரு பெண் உணராத வரை அவளால் விடுதலையையோ, சுதந்திரத்தையோ பெற்று விட முடியாது.
|
Last Updated on Saturday, 16 April 2016 21:47 |
Read more...
|
Samugam -
பெண்கள்
|
Written by சந்திரவதனா
|
Saturday, 16 April 2016 21:40 |
அடங்குதல் என்பது அன்பு, பாசம், நட்பு, மரியாதை இவைகளுக்குள் அடங்கும் ஒரு விடயம். அதை ஆண் - பெண் என்ற இருபால்களுக்கிடையில் அடக்க நினைப்பது அபத்தம்.
அன்பின் முன்னோ பாசத்தின் முன்னோ அடங்கு என்றோ அல்லது வளைந்து கொடு என்றோ யாருமே யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அன்பின் நெகிழ்ச்சியில் பாசத்தின் இறுக்கத்தில் அது தானே வரும். அதே போலத்தான் நட்பு என்ற தூய்மையான உறவின் போதும் மனங்கள் நட்புக்காய் அடங்கும். அல்லது வளைந்து கொடுக்கும்.
அதை விடுத்து ஆண் என்ற அதிகாரத்துக்கு முன் அடங்குதல் என்ற தேவை ஒரு பெண்ணுக்கு நிட்சயமாக இல்லை. ஏன் ஒரு பெண் அடங்க வேண்டும்? என்ன காரணத்துக்காக அடங்க வேண்டும்?
ஆணின் அடக்குதலும், பெண்ணின் அடங்குதலும் அல்ல வாழ்க்கை. ஆணோ பெண்ணோ மனசு ஒருமித்து, அன்பிலே ஒருவருக்கொருவர் அடங்கி, வளைந்து இன்புற்று வாழ்தலே வாழ்க்கை.
இங்கே பெண் மட்டும் அடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏன்? அதுவும் ஆண் என்ற அதிகாரத்துக்கு முன் அடங்கவேண்டும் என்று ஏன் எல்லோரும் எதிர் பார்க்க வேண்டும். பெண்கள் அடங்கினால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்பதுதான் இன்று பலரது கருத்தாக இருக்கிறது. உண்மையில் இப்படி நினைப்பதே தப்பானது. ஒரு ஆண் தன் மனைவியை அடக்கும் போது அவள் அடங்கி ஒடுங்கி இருந்து விட்டால் அதற்கு அர்த்தம் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதா? நிட்சயமாக இல்லை.
|
Last Updated on Saturday, 16 April 2016 21:48 |
Read more...
|
Samugam -
பெண்கள்
|
Written by சந்திரவதனா
|
Saturday, 16 April 2016 21:24 |
புலம் பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை மேலோட்டமாகப் பார்த்திருந்தோம். இனி திருமணமாகாத பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.
திருமணமாகாத பெண்பிள்ளைகளின் எதிர்காலம் கூட பல்வேறு விதமாகவேதான் அமையப் போகிறது. பெற்றோர்களின் தன்மையைப் பொறுத்தே பிள்ளைகளின் நிகழ்காலம் நிர்ணயிக்கப் படுகிறது.
அனேகமான பெற்றோர் கட்டுப்படுத்தி வளர்ப்பது ஒன்றுதான் பிள்ளைகளை நன்னெறிப் படுத்தும் என்று எண்ணி பிள்ளைகளின் முற்போக்கான தன்மைக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார்கள். இதனால் பிள்ளைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இப்படியான பெற்றோர்களின், பிள்ளைகளின் எதிர்காலம், எதிர்காலம் என்று சொல்வதை விட நிகழ்காலம் மிகவும் கடினமானதாகவே இருக்கும். இவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப் பட்டு எதிர்காலம் கூட இவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தி, இயல்பாகவே இவர்களிடம் உள்ள தன்னம்பிக்கை குறுகடிக்கப் பட்டு விடும்.
|
Last Updated on Saturday, 16 April 2016 21:38 |
Read more...
|
|
Samugam -
பெண்கள்
|
Written by சந்திரவதனா
|
Saturday, 16 April 2016 21:10 |
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.
"பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்..?" என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.
பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை. சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது.
|
Last Updated on Saturday, 16 April 2016 21:37 |
Read more...
|
Samugam -
பெண்கள்
|
Written by அன்னலட்சுமி இராஜதுரை
|
Monday, 10 November 2014 06:56 |
சிறுகதை படைப்பிலக்கியத்துக்கு நோபல் பரிசு வென்று உலகப்புகழ்பெற்ற கனேடிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ போன்று நாவல் இலக்கியத்துக்கு நோபல் பரிசு வென்று புகழ்பூத்தவர் தென்னாபிரிக்க எழுத்தாளரான நடின் கோர்டிமர் (Nadien Gordimer)
படைப்பிலக்கியத்தோடு மட்டும் தமது சிந்தனையையும் ஆற்றலையும் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் அதற்கப்பால் அரசியல் நடவடிக்கைகளிலும் சமூக அபிவிருத்தி விடயங்களிலும் காட்டிய ஊக்கம் அபாரமானது.
ஆளும் வெள்ளையர் வர்க்கத்தில் பிறந்தவர் சகல சுகபோகங்களுடன் எழுத்தை ஒரு பொழுதுப்போக்காக கொள்ளக்கூடிய ஒரு தராதரத்தில் இருந்த ஒரு பெண் படைப்பாளி தனது இனத்து அதிகார வர்க்கத்தினர் உதைத்து நசுக்கிய ஆபிரிக்க கறுப்பின மக்கள் மீது கொண்ட இரக்கம் போற்றத்தக்கது. அதுவே அவரது எழுத்தின் பிரத்தியட்சம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அமைந்த எழுத்துச் சிற்பங்களே நடின் கோர்டிமருக்கு 1991 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று தந்தன என்றால் மிகையில்லை. இந்த எழுத்து சிற்பி கடந்த ஜூலை 13ஆம் திகதி (2014) தமது தொண்ணூறாவது வயதில் அமரரான செய்தி உலகம் அறிந்ததே.
|
Last Updated on Saturday, 16 April 2016 21:56 |
Read more...
|
Samugam -
பெண்கள்
|
Written by ஆழ்வாப்பிள்ளை
|
Tuesday, 03 June 2014 11:12 |
நாட்டின் அதிபதி, உலகப் பொருளாதார மையத்தின் தலைவர், வீராங்கனை கவிஞர், கலைஞர், எழுத்தாளர் என்று பல உச்சங்களை இன்று பெண்கள் தொட்டிருக்கின்றார்கள். இப்படி எல்லாத் துறைகளிலும் முன்னிலையில் இருந்தாலும் இவர்கள் ஆண்களுக்குச் சமமாக இன்று ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டார்களா? என்ற கேள்வி இன்னமும் இருக்கிறது. ஐரோப்பாவைப் பார்க்கும் போது அல்லது ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஐரோப்பாவை ஒப்பிடும் பொழுது பெண்களின் வாழ்வும், வசதியும் அவர்களுக்கான உரிமையும் மேலோங்கி நிற்பது தெரியும். ஆனாலும் ஐரோப்பியப் பெண்களுக்கும் தொல்லைகள் இருக்கின்றன. அவர்களிடமும் அவலங்கள் நிறைந்த வாழ்வு இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது. உள்ளத்தில் காயம் இருக்கிறது. அவர்களுக்கு மேல் பிரயோகிக்கப் படும் அநேகமான வன்முறைகள் வெளியே தெரிவதில்லை. அதாவது தெரிவிக்கப் படுவதில்லை. வெளியே சொல்வதனால் பிரச்சினைகள் இன்னும் பூதாகரமாக மாறி விடுமோ என்ற பயம். அல்லது பிறருக்குத் தெரிவிப்பதில் அவமானம் ஏற்படுமோ என்ற கூச்சம். சமுதாயத்தால் ஒதுக்கப் படுவோமோ எனும் அச்சம் போன்ற பல பிரச்சினைகளால் தங்களுக்கு மேல் தொடுக்கப் படும் வன்முறைகளை, அது வீடானாலும் சரி அலுவலகங்களானாலும் சரி பெண்கள் தங்களுக்குள்ளேயே அமுக்கி விடுகிறார்கள். இதை சமீபத்தில் வெளியான ஐரோப்பிய அடிப்படை உரிமை மையத்தின் அறிக்கை ஒன்று தெளிவாக்கி இருக்கிறது. |
Read more...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 Next > End >>
|
Page 1 of 3 |