கே. எஸ். சுதாகர்

கே. எஸ். சுதாகர்1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகிறார். சுருதி, கதிரொளியான் இவரது புனைபெயர்கள். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகக் கல்வி பயின்றுள்ளார்.

இலங்கையில் ஈழநாடு, முரசொலி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் – யுகமாயினி, செம்மலர், வெற்றிமணி (ஜேர்மனி), பாலம் (நியூசிலாந்து), கலப்பை (அவுஸ்திரேலியா), சிவத்தமிழ் (ஜேர்மனி), தென்றல் (அமெரிக்கா), காற்றுவெளி என்பவற்றிலும் எழுதி வருகிறார். மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? போன்ற இணையத்தளங்களிலும் படைப்புகள் வந்துள்ளன.

’எங்கே போகின்றோம்’ என்ற சிறுகதைத்தொகுதி குமரன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இலண்டன்), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா) உட்பட மொத்தம் 15 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

Related Articles