அவளுக்கு ஒரு கடிதம்

நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை. ‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம், வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள். இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.  ‘அம்மா எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவிற்கு வந்தேன். நான் மனோவைத் தான் விரும்புகின்றேன். அவரும் என்னை விரும்புகின்றார். படித்து நல்ல உத்தியோகம் பார்க்கின்றார். அவருடைய நல்ல குணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றது. நன்றாகப் பழகுகின்றார். இதை விட வேறு என்ன வேண்டும்’  ‘ஹ_ ம்… செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டோம். படித்து நல்ல உத்தியோகமும் தேடிக்கொண்டுவிட்டாய். அங்கேயே ஒருத்தனை பிடித்தும்விட்டாய். நாங்கள் என்ன சொன்னாலும் நீ கேட்கவா போகின்றாய்? சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உன் இஷ்டம்!" அதற்குமேல் இவளிடம் பேசிப் பயனில்லை என்பது போல ஜானகி நகர்ந்து விட்டாள். நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலையில் சார்ச்சில் மோதிரம் மாற்றி, மாலையில் கலியாண மண்டபத்தில் அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், தாலி மட்டும் கட்டிக் கொண்டு உஷா, திருமதி உஷா மனோவானாள்.  Read more

Drucken   E-Mail

Related Articles